தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமான பயணிகளின் கடத்தல் சேட்டை: சுங்கத் துறையினரின் அதிரடி வேட்டை!

சென்னை: துபாய், மலேசியாவிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணிகளை சோதித்ததில் ஐந்து பேரிடமிருந்து 55 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம், வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

gold smuggling caught at chennai airport
தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல்

By

Published : Dec 5, 2019, 9:38 PM IST

சென்னைக்கு துபாய், மலேசியா நாடுகளிலிருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத் துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர். அதில் உள்ளாடை, பைகளில் மூன்று பயணிகள் மறைத்து எடுத்துவந்த 1.13 கிலோ தங்கக்கட்டிகள், தங்க நகைகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ.44 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தக் கடத்தலில் தொடர்புடைய ராமநாதபுரத்தைச் சோ்ந்த சேக் அப்துல்லா (28), தமீம் அன்சாரி (28), சிவகங்கையைச் சேர்ந்த அப்துல் பாசிக் (22) ஆகிய மூன்று பயணிகளை சுங்கத் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல்

மேலும், மற்றொரு விமானத்தில் கடத்தமுயன்ற ரூ.11.5 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலா், சவுதி ரியால், யூரோ கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், ராமநாதபுரத்தைச் சோ்ந்த சையத் முகமது (22), சிவகங்கையைச் சோ்ந்த சபீா் அகமது (21) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: கஞ்சா வழக்கில் கைது - பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றி கொடுமை செய்த போலீசார்!

ABOUT THE AUTHOR

...view details