சென்னை விமான நிலையத்தில் 2.8 கிலோ தங்கம் பறிமுதல் - gold
சென்னை: ஒரு கோடி மதிப்புடைய 2.8 கிலோ கடத்தல் தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
2.8 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்
இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட ஒரு கோடி மதிப்புடைய 2.8 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. அலுவலர்கள் பரிசோதனை செய்தபோது உடல் மற்றும் உள்ளாடையில் தங்கக் கட்டிகளை மறைத்து எடுத்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை,ராமநாதபுரம்,புதுக்கோட்டையை சேர்ந்த 9 பேரை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.