தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துபாயிலிருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.1.37 கோடி மதிப்புடைய தங்கம் உள்ளிட்டப்பொருட்கள் பறிமுதல்! - விமானம் மூலம் கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 1.37 கோடி ரூபாய் மதிப்புடைய 2.675 கிலோ தங்கப்பசை, மின்னணு பொருள்கள், குங்குமப் பூக்கள், சிகரெட்டுகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்
விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

By

Published : Jul 16, 2022, 10:54 PM IST

சென்னை:துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த பொன்னுசாமி (35) என்பவர் மீது சுங்கத்துறை அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவருடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 55.38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.25 கிலோ எடை உடைய தங்கப் பசையை, சுங்க அலுவலர்கள் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனர்.

இந்நிலையில் துபாயிலிருந்து வந்த மற்றோரு எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானப் பயணிகளை சோதனையிட்டனா். சென்னையைச்சோ்ந்த தமீம் அப்துல் ரகுமான் (38), திருச்சியைச் சோ்ந்த முகமது ஹபீபுல்லா (28) ஆகிய 2 பயணிகளை சோதனையிட்டனர்.

அவா்களுடைய உள்ளாடைகளுக்குள், 62.81 லட்சம் ரூபாய் மதிப்புடைய 1.425 கிலோ தங்கப்பசை இருந்ததை கைப்பற்றினர். அத்தோடு அவர்களின் உடமைகளில் இருந்த 18.97 லட்சம் ரூபாய் மதிப்புடைய மின்னணு சாதனங்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், குங்குமப்பூக்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில், 1.37 கோடி ரூபாய் மதிப்புடைய 2.675 கிராம் தங்கம், மின்னணு சாதனங்கள், குங்குமப்பூக்கள், சிகரெட்டுகளை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து, 3 பயணிகளைக் கைது செய்தனர்.

இதையும் படிங்க:திருடப்பட்ட தனது இருசக்கர வாகனத்தை ரூ.10ஆயிரம் கொடுத்து மீட்ட பெண்!

ABOUT THE AUTHOR

...view details