தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 23, 2020, 7:42 PM IST

ETV Bharat / state

விமானத்தில் தங்கம் கடத்திவந்த இளைஞர் கைது!

சென்னை: துபாயிலிருந்து விமானத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்திவந்த இளைஞரை சுங்கத்துறை அலுவலர்கள் கைது செய்தனர்.

200 கிராம் தங்கம் பறிமுதல்
200 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு இன்று (டிச.23) காலை துபாயிலிருந்து ஏா்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது. அதில், வந்த பயணிகளை சுங்கத் துறை அலுவலர்கள் சோதணையிட்டனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த சுபம்குமார் (23) என்ற பயணியின் மீது சந்தேகமடைந்த அலுவலர்கள், அவரை நிறுத்தி சோதணையிட்டனர். அப்போது, அவரது ஆடைக்குள் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 கிராம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

கேட்பாரற்று கிடந்த டிராலி:

இதையடுத்து, சுங்கத்துறை அலுவலகம் அருகே நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த டிராலியைக் கண்ட அலுவலர்கள், அதனை சோதணை செய்தனர். அதில் வெடிகுண்டு போன்ற அபாயகரமான பொருள் எதுவும் இல்லை என உறுதிசெய்யப்பட்டது. பின்பு, பையை திறந்து பாா்த்தபோது அது காலி பை எனத் தெரியவந்தது. இதனால், சந்தேகமடைந்த அலுவலர்கள், அந்த டிராலியை சுற்றிலும் தீவிரமாக சோதணையிட்டனர்.

தங்கம் வைக்கப்பட்டிருந்த டிராலி

அப்போது, டிராலியின் சக்கரங்களுக்கிடையே மறைத்து வைத்திருந்த 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 300 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், டிராலியை விட்டுச் சென்ற நபர் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுரை விமான நிலையத்தில் ரூ.18 லட்சம் தங்கம் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details