பாங்காங்கில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது இரண்டு பயணிகள் மீது சந்தேகம் அடைந்த அவர்கள் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

சோதனையில் பயணிகள் இருவரும் ஒரு கிலோ மதிப்புள்ள தங்கத்தை தங்களது உள்ளாடைக்குள் மறைத்து கடத்திக்கொண்டு வந்ததை அலுவலர்கள் கண்டுபிடித்தனர்.
உடனே தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத் துறையினர், அவர்களை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். பறிமுதல் செய்த தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.46 லட்சம் எனத் தெரிகிறது.