சோவியத் யூனியன் 1991ஆம் ஆண்டு 15 நாடுகளாக பிரிந்தது. இதில் உக்ரைனும் ஒன்று. இதற்கு முன்னதாக உக்ரைன், ரஷ்ய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. இதனால் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லைகளில் ஊடுருவி பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்துவருகிறது. உக்ரைனும் இழந்த பகுதிகளை மீட்க பதிலடி கொடுத்துவருகிறது. இப்படி இரு நாடுகளுக்கும் இடையே 2014ஆம் ஆண்டு முதல் போர் சூழல் நிலவிவந்தது.
இந்த நிலையில், பிப்.24ஆம் தேதி முதல் அங்கு போர் வெடித்துள்ளது. ரஷ்ய ராணுவப்படை தொடர்ந்து, மூன்றாவது நாளாக உக்ரைனில் வான்வழி, தரைவழி தாக்குதல்களை நடத்திவருகிறது. இந்த தாக்குதல் காரணமாக கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்தன. பங்குசந்தைகள் சரிவடைந்தன. இதில், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வந்த நிலையில், இன்று (பிப். 26) குறைந்துள்ளது.