தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 21, 2021, 12:08 PM IST

ETV Bharat / state

மீண்டும் எகிறும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.40 உயர்வு!

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 4.465 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம்
தங்கம்

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கணிசமாகக் குறைந்து வந்த நிலையில், கடந்த மூன்று நாள்களாக மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 4.465 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரன் 35,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம்

இதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து 38,632 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 66.60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 66,600 ரூபாயாக உள்ளது.

இதையும் படிங்க:’வங்கி லாக்கரை உடைக்க அதிகாரம்’ - புதிய விதிகள் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details