கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பொருளாதாரம் தேக்கநிலையை அடைந்துள்ளது. இதனால் மக்கள் தவித்துவருகின்றனர் என பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இருப்பினும், தங்கத்தின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதன்படி இன்றைய தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டு 22 கேரட் ஆபரணத் தங்கம் 57 ரூபாய் உயர்ந்து 5,150 ரூபாய் என விற்கப்படுகிறது. சவரனுக்கு 456 ரூபாய் உயர்ந்து 41, 200 ரூபாய்கு விற்பனை செய்யப்படுகிறது.
வேலையின்மை, போக்குவரத்து வசதி முடக்கம், குறைந்து காணப்படும் பணப்புழக்கம் என பல்வேறு பிரச்னை நிலவிவருகிறது. இது தொடர்பாக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், "உலக அளவில் டாலர்கள், யூரோக்கள், பணம் என கணக்கில்லாமல் அச்சடிக்கப்படுகின்றன.
பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் மக்கள் டாலர்களையும் பாண்டுகளையும் விற்று நகையாக வாங்கத் தொடங்கிவிட்டனர். இதன் விளைவாகவே தங்கத்தின் விலை அதிகரிக்கிறது. நாம் தங்கம் வாங்கவில்லை என்றாலும் தங்கத்தின் விலை ஏற்றத்தைத் தவிர்க்க முடியாது. ஒருவேளை கரோனா பிரச்சனை முடிவுக்கு வந்து உலக நாடுகள் பணம் அச்சடிப்பதை நிறுத்தினால் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது" என்றார்.
இதையும் படிங்க: எட்டு தொழிற்துறையின் உற்பத்தி 15 விழுக்காடு வரை சரிவு