சென்னை: சர்வதேச பொருளாதர சுழல் மத்தியில் இரண்டு வாரங்களாக தங்கம் விலை அதிகரித்து வந்தது. தற்போது தங்கத்தின் விலை சர்வதேச கமாடிட்டி மார்க்கெட்டை பொருத்து விலை நிர்ணயம் செய்யபட்டு வருகிறது. சென்னையில் ஆகஸ்ட் மாதத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.
44 ஆயிரத்துக்கு மேல் விற்பனையாகும் தங்கம் : மே மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிகபட்சமாக, ரூ.45 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்யபட்டது. அமெரிக்காவில் நிலவிய பொருளாதார சூழல், தொடர்ந்து திவாலான வங்கிகள் என பல்வேறு காரணங்களால், உலக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்ய தொடங்கினார்கள்.
அதைத் தொடர்ந்து, தங்கத்தின் விலையானது ஏழைக்கு எட்டா கனியாக மாறியிருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் விலையானது, மாதத் தொடக்கத்தில் குறைந்து வந்தாலும் ஆகஸ்ட் 29- முதல் 31-ஆம் தேதி வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 வரை உயர்ந்து விற்பனை ஆனது. மேலும், செப்டம்பர் மாதத்தில் தங்கத்தின் விலையானது அதிகரித்து வருகிறது.
இன்றைய நிலவரம்:சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப் 4) கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,560-க்கும் சவரனுக்கு ரூ.120உயர்ந்து ரூ.44,480-க்கும் விற்பனையாகிறது. இதேப்போல் வெள்ளி கிராம் ரூ.80க்கும் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.80,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:Speaking For India : முதலமைச்சர் ஸ்டாலினின் "ஸ்பீக்கிங் பார் இந்தியா" ! இந்திய மொழிகளில் ஆடியோ வெளியீடு!
இனி வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும்: தங்கத்தின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏறு முகமாகவே இருந்து வருகிறது. செப்டம்பர் மாதம் தொடங்கியது முதல் இந்தியாவில் தங்கத்தின் விலையானது ஏறு முகமாகவே இருந்து வருகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவின் பெடரல் வங்கியின் வட்டி விகிதத்தை உயத்தி வருகிறது. அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுபடுத்த இதுவும் ஒரு காரணமாக அமைய, இதனால், உலகம் முழுவதும் அமெரிக்க டாலர் நிகரில், தங்கம் விலை ஏற்றம் இறக்கம் அடைந்து வந்தது. இதன் காரணமாக, இந்த மாதத்தொடக்கத்தில் இந்திய சந்தையில் தங்கத்தின் சுமார் 1.5% முதல் 2% வரை குறைந்தது.
இந்நிலையில், கடந்த இரண்டு தினத்தில் தங்கத்தின் விலை மற்றும் 3.5% வரை உயர்ந்துள்ளது. தொடர்ந்து சர்வதேச பொருளாதர சுழலில், சர்வதேச அரசியல் பதற்றம், பணவீக்கம் என்று பல்வேறு பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. மேலும், அமரிக்க பத்திர சந்தையில், சற்று பின்னடவை சந்தித்துள்ளது, இத்தைகைய சூழ்நிலையில் தங்கத்தின் விலை இனி ஏறுவதற்கு வாய்புகள் இருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் வட்டாரம் தெரிவிக்கின்றது.
இதையும் படிங்க:அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை யார் விசாரிக்கலாம்? முடிவுக்கு வந்த சென்னை உயர் நீதிமன்றம்!