தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை! - இன்று தங்கத்தின் விலை

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 168 ரூபாய் உயர்ந்துள்ளது.

gold price hike
gold price hike

By

Published : Feb 22, 2020, 3:54 PM IST

கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை அதிகரிப்பது வாடிக்கையாக உள்ளது. மக்களும் தினந்தோறும் இன்றைக்கு தங்கம் விலை எவ்வளவு உயர்ந்திருக்கும் என்று பயப்படும் மன நிலையில் உள்ளனர். இதன் விலை நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக வளர்ந்துகொண்டே வருகிறது.

தங்கத்தை ஆபரணப் பொருளாகப் பார்ப்பவர்களைவிட முதலீடாகப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஏற்கனவே இந்தாண்டு தங்கம் விலை உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்த நிலையில், ஆண்டு தொடக்கத்திலிருந்து தங்கம் விலை உயர்ந்துகொண்டேவருகிறது. தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் நேற்று ஒரு சவரன் 32 ஆயிரத்து 408ஆக இருந்த தங்கம் விலை இன்று 168 ரூபாய் உயர்ந்து 32 ஆயிரத்து 576 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை 21 ரூபாய் உயர்ந்து நான்காயிரத்து 72 ரூபாயாக உள்ளது. இன்று சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துவருவதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தற்போது தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்துவந்தாலும், இந்தாண்டு இறுதியில் உலகப் பொருளாதாரம் முன்னேற்றம் காணும்போது அவற்றின் விலை பெரியளவில் சரிய வாய்ப்புள்ளதாகவும் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க:உ.பி.யில் 3 ஆயிரம் டன் தங்கப்புதையல் - இந்தியாவுக்கு அடித்த லாட்டரி

ABOUT THE AUTHOR

...view details