சென்னை: தங்கத்தின் விலையானது சர்வதேசப் பொருளாதார சுழலின் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி சர்வேதச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்காவின் வங்கிகளின் வட்டி விகிதம் என்று பல்வேறு காரணங்களை முன்வைத்துதான் தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் எதிரோலியாக கடந்த 8 நாட்களாக தங்கத்தின் விலை தினமும் ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அன்று தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.42,280-ஆக இருந்தது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 7ஆம் தேதி மதியம், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தாக்குதல் தொடங்கியது. அன்றைய தினமே தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு வார காலமாக தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம் இறக்கம் என்பது இருந்து கொண்டே வருகிறது. ஒரு நாள் தங்கம் விலை குறைந்தால், அடுத்த நாள் குறைந்த விலையை விட அதிக அளவிலேயே அதிகரிக்கிறது. அந்த வகையில் நேற்று (அக்-17) சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில், இன்று (அக்-18) மீண்டும் தங்கம் விலையானது அதிகரித்துள்ளது.