தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு! - today latest news in tamil

Gold Rate on 2023, November 14: கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை சற்று ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.

Gold Rate on 2023 November 14
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 11:40 AM IST

சென்னை: கடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேல் - ஹமாஸ் இடைய நடைபெற்று வரும் போரின் எதிரொலியால் உலகம் முழுவதும் தங்கத்தில் முதலீடும், அதன் விலையும் தொடர்ச்சியாக ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியால் உள்நாட்டுச் சந்தையிலும், தங்கத்தின் விலை தினமும் மாறுதலாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் இன்று (நவ.14) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5,615-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.44,920-க்கும் விற்பனை ஆகி வருகிறது. இதேபோல், வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76-க்கும், ஒரு கிலோவிற்கு ரூ.600 உயர்ந்து ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.76,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ச்சியாகக் குறைந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை (நவ.11) அன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 வரை குறைந்தது. அதைத் தொடர்ந்து, தங்கத்தின் விலையானது தொடர்ந்து 3 நாட்கள் ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டது. இதை அடுத்து, நேற்று (நவ.13) சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில், இன்று (நவ.14) சவரனுக்கு ரூ.200 வரை அதிகரித்துள்ளது.

இன்றைய (நவ.14) நிலவரப்படி தங்கத்தின் விலை:

  • 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,615
  • 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.44,920
  • 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.6,085
  • 1 சவரன் தங்கம் (24-கேரட்) - ரூ.48,680
  • 1 கிராம் வெள்ளி - ரூ.76.00
  • 1 கிலோ வெள்ளி - ரூ.76,000

இதையும் படிங்க:பழனி முருகன் கோயிலில் காப்புக் கட்டுடன் துவங்கிய கந்த சஷ்டி திருவிழா!

ABOUT THE AUTHOR

...view details