ஐஐடி மெட்ராஸ் அடையாறு அவென்யூ பகுதியில் வசிப்பவர் அர்ஜுனன். இவர் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
ஐஐடி கண்காணிப்பாளர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை - தங்க நகை திருட்டு
சென்னை: ஐஐடி வளாகத்தின் கண்காணிப்பாளர் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இந்தநிலையில் அர்ஜுனன் காலையில் தனது வீட்டை பூட்டி கொண்டு சொந்த வேலையாக வெளியில் சென்று மதியம் வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 40 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூபாய் 1 லட்சம் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.