தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Go Back Modi : ட்விட்டர் திடீர் ட்ரெண்டிங்கில் 'கோ பேக் மோடி' பின்னணி என்ன? - when PM Modi comes to Tamilnadu next month what will happen Go Back Modi

Go Back Modi: திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பிரதமர் தமிழ்நாடு வருகையினை கடுமையாக எதிர்த்த திமுக, தற்போது ஆட்சியைப் பிடித்து உள்ள நிலையில் திமுக சார்பில் Go Back Modi எதிர்ப்பு தெரிவிக்கப்படுமா என அதிமுகவினர், நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைத்தளத்தில் விவாதம் செய்து வருகின்றனர்.

ட்விட்டர் திடீர் ட்ரெண்டிங்கில் 'கோ பேக் மோடி' பின்னணி என்ன
ட்விட்டர் திடீர் ட்ரெண்டிங்கில் 'கோ பேக் மோடி' பின்னணி என்ன

By

Published : Dec 29, 2021, 4:23 PM IST

Updated : Dec 30, 2021, 2:01 PM IST

சென்னை:GoBackModi: தமிழ்நாட்டில் புதிதாகக் கட்டப்பட்டு உள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்கப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் ஜனவரி 12ஆம் தேதி தமிழ்நாடு வர இருக்கிறார்.

பிரதமர் வருகை

பிரதமர் மோடி வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக விருதுநகருக்குச் சென்று, பிரதமர் மோடி விருதுநகரில் புதிய மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்து, மற்ற 10 மருத்துவக் கல்லூரியை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்போது, பிரதமரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையம் சென்று பொன்னாடைப் போர்த்தி புத்தகம் பரிசளித்து வரவேற்க இருக்கிறார். பிரதமரை வரவேற்கத் தமிழ்நாடு அரசு தயாராகி வரும் நிலையில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் Go Back Modi என்ற ஹேஷ்டேக் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ட்விட்டர் திடீர் ட்ரெண்டிங்கில் 'கோ பேக் மோடி'

பின்னணி என்ன?
கடந்த முறை பிரதமர் ஒவ்வொரு முறை தமிழ்நாடு வந்த போதும் Go Back Modi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வந்தது, திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பிரதமர் மோடி, தமிழ்நாடு வருகை தருவதை கடுமையாக எதிர்த்த திமுக, தற்போது ஆட்சியைப் பிடித்து உள்ளது.

இந்த நிலையில் திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுமா என அதிமுகவினர், நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைத்தளத்தில் விவாதம் செய்து வருகின்றனர். இதற்கு திமுகவினர் எதிர்வினை ஆற்றி வரும் நிலையில், ட்விட்டரில் கோ பேக் மோடி தற்போதே ட்ரெண்டாக தொடங்கி உள்ளது.

ட்விட்டர் திடீர் ட்ரெண்டிங்கில் 'கோ பேக் மோடி'

இதையும் படிங்க:Year End Special on Major Crime Incidents: 2021ஆம் ஆண்டு முக்கிய குற்றச்சம்பவங்கள்

Last Updated : Dec 30, 2021, 2:01 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details