காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள பால் நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள். இவரது மகள் திவ்யபாரதி (28). இவருக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு ராமநாதபுரத்தைச் சேர்ந்த சேட்டு என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களுக்கு ஆறு வயதில் பெண் குழந்தையும், இரண்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சேட்டு, திவ்யபாரதியிடம் அடிக்கடி பணம், நகை கேட்டு தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் சேட்டுக்கு பல பெண்களுடன் தொடர்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இந்நிலையில் இன்று(ஆக.3) தனது கணவர் வீட்டில் திவ்யபாரதி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.