போரூர் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையோரம் தனியார் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலையை ஒட்டி சுமார் 50 அடியில் ராட்சத தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று (மே.25) இரவு பலத்த காற்று வீசியதால், அந்த ராட்சத தடுப்பானது சரிந்து மின்சார கம்பம் மீது சாய்ந்து, மின்சார ஒயர்கள் மீது விழுந்தது.
இதனைக்கண்ட அப்பகுதியினர் மின்சாரத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து, நள்ளிரவு 12.30 மணிக்கு மின்சார சேவை துண்டிக்கப்பட்டதோடு, சென்னை மாநகராட்சியிலும், கட்டட நிர்வாகத்தினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக கிரேன் ஏற்பாடு செய்ய முடியாது என்பதால், காலையில் இதனை அகற்றுவதாகத் தெரிவித்தனர்.