சென்னை:ஜெர்மன் நாட்டின் பிராங்க்பார்ட் நகரில் இருந்து 286 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், திடீர் இயந்திர கோளாறு காரணமாக சென்னையில் தரையிறங்காமல் மீண்டும் பிராங்க்பார்ட் நகருக்கே திருப்பி அனுப்பப்பட்டது.
ஜெர்மன் நாட்டின், பிராங்க்பார்ட் நகரில் இருந்து சென்னை வரும் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தினமும் நள்ளிரவு 12:05 மணிக்கு சென்னைக்கு வரும். அதனைத்தொடர்ந்து, மீண்டும் அதிகாலை 1:55 மணிக்கு பிராங்க்பார்ட் நகருக்கு மீண்டும் புறப்பட்டு செல்லும்.
இந்நிலையில், நேற்று (அக். 1) ஞாயிறு மாலை பிராங் பார்ட்டிலிருந்து 286 பயணிகளுடன் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டது. லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த விமானம் சென்னைக்கு வராமல் அவசரமாக பிராங்க்பார்ட் நகருக்கே திரும்பி அனுப்பப்பட்டது.
இதையும் படிங்க:"மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி" - கலைஞரின் கனவு திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்!