இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பின் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பன்னிரெண்டாம் வகுப்பு வணிகவியல், பொருளியல் பிரிவு மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் பயிற்சி வழங்குவதற்காக, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவுடன் பயிற்சி வகுப்புகள் தொடங்க பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் தென்னிந்திய கணக்காயர் அமைப்புடன் இணைந்து இந்தப் பயிற்சி வகுப்பினை பள்ளிக்கல்வித்துறை நடத்தும். ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அந்தந்த கல்வி மாவட்ட அளவில் மாதிரி வினாத்தாள் தயாரித்து விரைவில் வெளியிடப்படும்.