இந்த ஆண்டு முதல் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் தொடக்கக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், 5ஆம் வகுப்பிற்கு 1 கிலோமீட்டர் தொலைவிலும், 8ஆம் வகுப்பிற்கு மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகளில் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவு மாணவர்கள், பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.