சென்னை: அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், செருப்புகள், உள்ளாடைகளில் மகாத்மா காந்தி மற்றும் கடவுள்களின் புகைப்படங்களை அச்சிட்டு விற்பனை செய்து வருவதாகவும், அந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரி, மதுரையைச்சேர்ந்த முத்துகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், சர்வதேச ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் இந்த செயல்பாடு இந்திய நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடும் வகையில் உள்ளதாகவும், மக்களின் மத நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.