தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் இன்று முழு ஊரடங்கு - கண்காணிப்பைத் தீவிரப்படுத்திய காவல் துறை!

சென்னை: ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஜூலை 12) சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், தேவையில்லாமல் வெளியே சுற்றும் நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.

Full lockdown
Full lockdown

By

Published : Jul 12, 2020, 8:52 AM IST

Updated : Jul 12, 2020, 9:00 AM IST

சென்னையில் இன்று (ஜூலை 12) எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு என்பதால், பொதுமக்களுக்கு காவல் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, அத்தியாவசியத் தேவைகளான பால் விநியோகம், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள் போன்ற வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், பொதுமக்கள் அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், தெருக்களில் கூட்டம் கூடி நிற்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இதனை மீறி வெளியே சுற்றும் நபர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல் துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை முழுவதும் 193 வாகன சோதனைச் சாவடிகள் அமைத்து, தீவிரக் கண்காணிப்பில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:அபராதம் விதிக்கும் காவல்துறை: கண்டுகொள்ளாத வாகன ஓட்டிகள்

Last Updated : Jul 12, 2020, 9:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details