தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா.. எங்கெல்லாம் நடைபெறுகிறது? - அரசாணை

Chennai Sangamam Event: தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில் சென்னையில் வரும் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா 18 இடங்களில் நடைபெறுகிறது.

full details of chennai sangamam namma ooru thiruvizha event venues at chennai
சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி நடக்கும் இடங்கள் பற்றிய முழு விவரம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 5:05 PM IST

சென்னை:சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா என்ற கலை நிகழ்வு ஜனவரி 13ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தீவுத்திடலில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சென்னையில் 18 இடங்களில் இந்த கலை விழாக்கள் நடைபெற உள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 1

இது தொடர்பாகத் தமிழக அரசு ஏற்கனவே, "பெரும்பான்மை மக்களின் வரவேற்பு பெற்ற சென்னை சங்கமம் கலை விழா, மேலும் எட்டு முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்" என்று அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, சென்னையோடு சேர்த்து காஞ்சிபுரம், மேலூர், தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவினை நடத்த அரசாணை வெளியிடப்பட்டது.

சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2

இந்த அரசாணையின் அடிப்படையில் முதற்கட்டமாகச் சென்னையில், சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா பிரம்மாண்டமாக ஜனவரி 13 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தீவுத்திடலில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. அந்த வகையில், சென்னையில் 18 இடங்களில் இந்த கலை விழாக்கள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 3

அதன்படி சென்னையில், அம்பத்தூர், வளசரவாக்கம், ராயபுரம், கொளத்தூர், தீவுத்திடல், பெரம்பூர், மயிலாப்பூர், செம்மொழி, பெசன்ட் நகர், திருவான்மியூர், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, தி நகர், எழும்பூர், கோயம்பேடு, அண்ணா நகர், கே.கே நகர் உள்ளிட்ட 18 இடங்களில், சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு செய்துள்ளது.

சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 4

இதற்கான, அனைத்து பணிகளையும் சரியான முறையில் திட்டமிட்டு விரைந்து முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், சென்னை வாழ் மக்கள் தமிழகத்தின் பாரம்பரியத்தையும், பண்பாட்டினையும் அறிந்து கொள்வதற்காகவும், நாட்டுப்புறக் கலை வடிவங்களைக் கண்டுகளிக்க ஏதுவாகவும், நாட்டுப்புற கலைஞர்கள் பயன்பெறும் வகையிலும் இவ்விழா நடத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 5

இதையும் படிங்க:பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் பெறவில்லையா? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு இதோ!

ABOUT THE AUTHOR

...view details