தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுழற்சி முறையில் மாதவரம் பழ வியாபாரிகள் வியாபாரம் செய்வதை பரிசீலிக்க உத்தரவு

சென்னை : மாதவரம் தற்காலிகப் பழச்சந்தையில் உரிமம் பெற்ற அனைத்து வியாபாரிகளையும் சுழற்சி முறையில் வியாபாரம் செய்ய அனுமதிக்கக் கோரிய மனுவை பரீசிலிக்க, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Fruit vendors relocation representation, govt consider the representation, MHC order
Fruit vendors relocation representation, govt consider the representation, MHC order

By

Published : Aug 20, 2020, 3:17 PM IST

கரோனா பரவலைக் கட்டுபடுத்தும் விதமாக அதிக அளவில் மக்கள் கூடும் கோயம்பேடு சந்தையை மூட தமிழ்நாடு அரசு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. தொடர்ந்து, கோயம்பேட்டில் இயங்கி வந்த காய்கறிக் கடைகள் திருமழிசை பகுதிக்கும், பழக்கடைகள் மாதவரம் பேருந்து நிலையம் இருந்த இடத்திற்கும் தற்காலிகமாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில், சென்னை வாழ்வானூர் எஸ்.சி/எஸ்.டி உறவின் முறைகள் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ”கோயம்பேடு சந்தையில் 800 பழக்கடைகள் அனுமதி பெற்று இயங்கி வந்த நிலையில், தற்போது தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ள மாதவரம் சந்தையில் 200 பழக் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால், மீதமுள்ள 600 பழ வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகி கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்டுள்ள 600 பழக்கடை வியாபாரிகளுக்கு சென்னையின் வேறு பகுதியில் மாற்று இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் அல்லது மாதவரம் பகுதியிலேயே அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் சுழற்சி முறையில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரர் சங்கம் அளித்த மனுவை மூன்று வாரங்களில் பரீசீலனை செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details