தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமான நிலையத்தில் வாகனங்களுக்கான இலவச நேரம் விரைவில் ரத்து! - இலவச நேரம் ரத்து

சென்னை: உள்நாடு, சா்வதேச முனையங்களுக்கு பயணிகளை ஏற்றிவரும் அனைத்து வாகனங்களுக்கும் இதுவரை இருந்த 10 நிமிடத்திற்கான இலவச நேரம் வருகின்ற 15ஆம் தேதியுடன் ரத்து செய்யப்படுகிறது.

chennai airport

By

Published : Jul 14, 2019, 3:56 PM IST

உள்நாடு, சர்வதேச முனையங்களுக்கு பயணிகளை ஏற்றி வரும் சொந்த உபயோகத்திற்கான வெள்ளை போா்டு வாகனங்கள், ஏர்போா்ட் அத்தாரிட்டி அங்கீகாரம் பெற்ற ஓலா, ஏவியேசன் எக்ஸ்பிரஸ் காா்கள் பயணிகளை இறக்கிவிட்டு உடனடியாக வெளியே சென்றுவிட்டால் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக சென்றுவிடலாம். ஆனால், உள்ளேயே நிறுத்தி வைத்திருந்தால் 30 நிமிட பாா்க்கிங் கட்டணம் ரூ.40 உடன் சோ்த்து நான்கு மடங்கு அபராதம் வசூலிக்கப்படும்.

வாடகை காா்கள் மஞ்சள் போா்டு வாகனங்களில் வரும் பயணிகள் சென்னை விமான நிலையத்திற்குள் நுழையும்போதே குறைந்தபட்ச பாா்க்கிங் கட்டணமான ரூ.40 கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்நிலையில் வருகின்ற 15ஆம் தேதி திங்கட்கிழமை முதல் சென்னை விமான நிலையத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் நுழைவு வாசலிலேயே RFID எனப்படும் மின்னனு அட்டை வழங்கப்படும். அதில் வாகனங்களின் எண், உள்ளே வந்த நேரம், வெளியே செல்லும் நேரம் என அனைத்தும் பதிவாகும். அதற்கு தகுந்தாற் போல் கட்டணம் வசூலிக்கப்படும்.

சென்னை விமான நிலையத்தில் இதுவரை அனைத்து வாகனங்களுக்கும் இலவசமாக 10 நிமிட நேரம் இருக்கிறது. அது முழுமையாக ரத்து செய்யப்பட்டு,சொந்த காரில் வருவபா்களுக்கு இலவசம், வாடகை காா்களில் வருபவா்களுக்கு ரூ.40 நுழைவு கட்டணம் என்ற இரட்டை அளவுகோலை சென்னை விமான நிலைய நிா்வாகம் அமல்படுத்துகிறது.

ABOUT THE AUTHOR

...view details