தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முருகனின் 6 படை வீடுகளுக்கு முதியவர்களுக்கு இலவச ஆன்மிகம் சுற்றுலா.. அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு! - இந்து சமய அறநிலையத் துறை

TN Free spiritual tourism for Senior Citizens: 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 200 நபர்களை ஆண்டிற்கு 5 முறை என 1,000 பக்தர்களை இலவசமாகச் சுற்றுலா பயணம் அழைத்துச் செல்ல இருப்பதாகவும், அதற்காக விண்ணப்பிக்கலாம். எனவும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

free-spiritual-tourism-for-senior-citizens-minister-sekar-babu-announced
முருகனின் 6 படை வீடுகளுக்கு முதியவர்களுக்கு இலவச ஆன்மிகம் சுற்றுலா.. அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 10:28 PM IST

Updated : Jan 10, 2024, 10:46 PM IST

சென்னை: தமிழகத்தில் இருக்கும் அறுபடை வீடுகளுக்கு, கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 200 நபர்களை ஆண்டிற்கு 5 முறை, அதாவது 1,000 பக்தர்களை அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைத்திட இந்து சமய அறநிலையத்துறை புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாகச் சென்று தரிசனம் செய்திடச் சிரமப்படுகிறார்கள்.

இதனைக் கருத்தில் கொண்டு, இந்த 6 திருக்கோயில்களுக்கும் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 200 நபர்களை ஆண்டிற்கு 5 முறை, அதாவது 1,000 பக்தர்களை அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைத்திட இந்து சமய அறநிலையத்துறை புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக வருகின்ற 28ஆம் தேதி அன்று அறுபடை வீடுகளின் ஆன்மிக சுற்றுப்பயணம் தொடங்க இருக்கின்றது. இதற்கான விண்ணப்பத்தினை நாளை (ஜன.11) முதல் இந்து அறநிலையத் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

தகுதியுடைய 200 விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட பயணத்தில் அழைத்துச் செல்லப்படுவர். ஏனைய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்த ஆன்மிக பயணங்களில் அழைத்துச் செல்ல முன்னுரிமை வழங்கப்படும்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "மானசரோவர், முக்திநாத் மற்றும் இராமேஸ்வரம் – காசி ஆன்மிக பயணங்கள் செயல்படுத்தப்பட்டு பக்தர்கள் பயன்பெற்று வருகின்றனர். இராமேஸ்வரம் - காசி ஆன்மிக பயணத்திற்கு இந்தாண்டு 300 நபர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இதற்காகத் தமிழ்நாடு அரசு ரூ.75 லட்சத்தை மானியமாக வழங்கியுள்ளது. பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூச விழாவினை சிறப்பாக நடத்திட ஏதுவாக முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அறுபடை வீடு திருக்கோயில்களிலும் தைப்பூசத்திற்குச் சிறப்புத் தரிசன கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாகக் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்" என தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, திருக்கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 2,646 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பொங்கல் கொடை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்து, 10 நபர்களுக்கு ரூ.1,000/- கான காசோலைகளை வழங்கினார்.

இதையும் படிங்க:யார் உண்மையான சிவசேனா? உத்தவ் தாக்ரேவின் அடுத்த திட்டம் என்ன?

Last Updated : Jan 10, 2024, 10:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details