தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் தாக்குதலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இச்சூழ்நிலையில், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்களின் தேவைகளை உடனுக்குடன் அறிந்துகொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் கட்டணம் இல்லா உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு கடந்த 27ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, முதியவர்களும் மாற்றுத்திறனாளிகளும் 18004-250111 என்ற எண்ணை தங்கள் தேவைகளுக்காகத் தொடர்பு கொள்ளலாம். கேட்கும் மற்றும் பேசும் திறனற்றவர்களுக்கு காணொலி மூலம் சைகை மொழியில் (Sign language) தங்களது தேவைகளைத் தெரிவிக்க 97007- 99993 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த இரண்டு எண்களும் 24 மணி நேரமும் செயல்படும்.