தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று காரணமாக ஏழை எளிய மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் அவர்களின் உதவியாளர்களுக்கு மே 12 முதல் நேற்று (ஜூன் 14) வரை நாள்தோறும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் திருக்கோயில்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தன.
நோய் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் 21ஆம் தேதி வரை உணவுப்பொட்டலங்கள் வழங்க உத்தரவு இந்நிலையில் பாதிப்பு அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் வரும் 21 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகள் மற்றும் உதவியாளர்களுக்கு 21ஆம் தேதி வரை தொடரந்து இலவச உணவு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான கூடுதல் நிதி தேவைப்படும் திருக்கோயில்களுக்கு அன்னதான திட்ட மைய நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.