விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சின்னதாய் இரண்டு பெண்களோடு கிரேட் லேக்ஸ் சொசைட்டி என்ற அமைப்பை நடத்தி வருகிறார். சென்னை எழும்பூரில் உள்ள போர்டல் என்ற நட்சத்திர ஓட்டலில் குடும்பத்தோடு மாதக்கணக்கில் தங்கி விட்டு முதலில் ஒழுங்காக பணம் கொடுத்து நல்லவர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி கொண்டுள்ளார். ஆனால், சக்திவேல் ஓட்டலில் தங்கியவர்களிடம் தனியாக பணம் பெற்றுள்ளதாக தெரிகிறது.
தொழிலதிபர் என்று கூறி நட்சத்திர விடுதியில் தங்கி மோசடி - ஒருவர் கைது - star hotel
சென்னை : தொழிலதிபர் என்று கூறி நட்சத்திர விடுதியில் தங்கிவிட்டு 26 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
தொழிலதிபர் என்று கூறி நட்சத்திர விடுதியில் தங்கி மோசடி
இதையடுத்து, ஹோட்டல் நிர்வாகத்தின் மேலாளர் முத்துக்குமார் என்பவர் எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் உதவி ஆணையர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு சக்திவேலை கைது செய்தனர்.மேலும், அவருடன் இருந்த அவரது மனைவி மற்றும் இரண்டு பெண்களையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.