சேலம் மாவட்டம் மேட்டூர், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இவர்கள் இருவருக்கும் கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது.
கருப்பு பூஞ்சை தொற்று பாதித்து நான்கு பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி! - four people infected with balck fungus
சேலம்: கருப்பு பூஞ்சை தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் நான்கு பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உடனே, அவர்கள் இருவரும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது கருப்பு பூஞ்சை தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறியுடன் மேலும் நான்கு பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கருப்பு பூஞ்சை தொற்று நோய் பாதிப்பைக் கண்டறிய தனி மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறியுள்ளவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கருப்பு பூஞ்சை தொற்றுக்கு தேவையான மருந்துகளைக் கேட்டு பெறவும் அரசு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கடை உரிமையாளரை கட்டி போட்டு ரூ.50 லட்சம் கொள்ளை!