மதுரைஅருகே விளக்குத்தூண் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் சாக்குமூட்டையுடன் வந்த இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அந்த வாகனத்தில் 40 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த லெட்சுமிபுரம் பகுதியைச்சேர்ந்த ஜோராராம் மற்றும் ஹரீஸ் ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்களிடம் இருந்து சுமார் 400 கிலோ அளவுள்ள குட்கா 3 செல்போன்கள், இருசக்கர வாகனம் மற்றும் 45ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.