தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போதை மருந்து கொடுத்து 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு - 4 பேர் கைது

போதை மருந்து கொடுத்து 13 வயது சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்த மருத்துவக் கல்லூரி மாணவர் உள்பட நான்கு பேரைக் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.

சிறுமி பாலியல் வண்புணர்வு
சிறுமி பாலியல் வண்புணர்வு

By

Published : Feb 28, 2022, 5:28 PM IST

சென்னை பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வரும் 13 வயது சிறுமி, அவரது வீட்டிற்கு அருகேவுள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சிறுமியின் பாட்டி வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், 'சிறுமி வீட்டருகேவுள்ள கடைக்குச்சென்று தினமும் பானிபூரி சாப்பிட்டு சென்று வரும்போது, தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் படிக்கும் மாணவர் வசந்தகிரிஷ் (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவ மாணவன் சிறுமியின் இன்ஸ்டாகிராம் ஐடியை வாங்கி, அவருடன் தினமும் தொடர்பில் இருந்துள்ளார்.

பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது. இதனை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்ட வசந்தகிரிஷ், தான் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சிறுமியை அழைத்துச்சென்று ஆசை வார்த்தைக்கூறி, தனது பாலியல் இச்சைக்கு இணங்க வைத்து அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டதை வசந்தகிரிஷ் அவரது நண்பர்களான சதீஷ்குமார், விஷால், தனியார் கல்லூரி பகுதி நேர உதவிப்பேராசிரியர் பிரசன்னா ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் வசந்தகிரிஷின் நண்பர்கள் சிறுமியிடம் உனக்கும், வசந்துக்கும் இடையே நடந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருக்க தங்களுடன் பாலியல் இச்சைக்கு இணங்குமாறு மிரட்டல் விடுத்ததுடன் இன்ஸ்டாகிராமிலும் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று (பிப். 27) சிறுமியை வசந்தகிரிஷின் குடியிருப்புக்கு அழைத்துச் சென்ற 4 பேரும் அவருக்கு ஹூக்கா எனும் போதைப்பொருளை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமி வீட்டில் பதற்றத்துடன் பயந்ததுபோல் இருந்ததால் சந்தேகமடைந்து அவரிடம் விசாரித்தபோது, சிறுமி நடந்த உண்மைகளை தன்னிடம் தெரிவித்தார்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் பேரில் வடபழனி அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர். தொடர்ந்து சிறுமியைப் பாலியல் வண்புணர்வு செய்த மருத்துவக் கல்லூரி மாணவர் வசந்தகிரிஷ் (20), சினிமா துணை நடிகர் சதீஷ்குமார் (22), விஷால் (19), கல்லூரி உதவிப்பேராசிரியர் பிரசன்னா (32) ஆகிய நான்கு பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரிடமும் காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்ட காவல் துறையினர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:Video: கரூரில் இளைஞரைத் தாக்கிய 10 பேர் கும்பலுக்கு வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details