தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா பிறந்த நாள், சுதந்திர தினத்தினையொட்டி 40 கைதிகள் விடுதலை - A long term prison sentence

அண்ணா பிறந்தநாள் மற்றும் 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் மொத்தம் 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு மத்திய சிறைச்சாலையில் இருந்து 40 கைதிகள் விடுதலை
அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு மத்திய சிறைச்சாலையில் இருந்து 40 கைதிகள் விடுதலை

By

Published : Aug 26, 2022, 7:56 PM IST

சென்னை:தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும், 700 கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதேபோல, 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விதிமுறைக்குட்பட்டு விடுதலை செய்யலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.

அதன்படி தமிழ்நாட்டில் மத்திய சிறைகளில் நீண்ட நாட்களாக இருக்கும் கைதிகளில் விடுதலை செய்வதற்கு தகுதியானவர்களை அடையாளம் காண விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டன. இதில் 10 ஆண்டுகள் சிறையில் உள்ள கைதிகளில் நன்னடத்தையுடன் இருப்பவர்களை விடுதலை செய்யவும், பாலியல் துன்புறுத்தல், பயங்கரவாத குற்றங்கள், கடத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டவர்கள் விடுதலை பெற தகுதியற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து முன்விடுதலையாகும் கைதிகளின் விவரங்களை சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் 9 மத்திய சிறைகளில் இருந்து தேர்வான கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இதில் நேற்று வரை மட்டும் 40 கைதிகள் விடுதலையாகினர்.

அதன்படி, அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 21 கைதிகளும் சுதந்திர தினத்தை முன்னிட்டு 19 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விதிகளுக்கு உட்பட்டு விடுதலைக்கு தகுதியான கைதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் படிப்படியாக கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஜாமினில் வெளி வந்து 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

ABOUT THE AUTHOR

...view details