தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செக் மோசடி வழக்கில் உதயம் திரையரங்கின் முன்னாள் உரிமையாளர் கைது! - செக் மோசடி வழக்கு

சினிமா நிதியாளரிடம் பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தண்டனை உறுதி செய்யப்பட்ட காரணத்தினால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உதயம் திரையரங்கின் முன்னாள் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 29, 2023, 4:19 PM IST

சென்னை:பிரபலஉதயம் திரையரங்கின் முன்னாள் உரிமையாளர்,சினிமா பைனான்சியரிடம் பணம் வாங்கிய விவகாரத்தில் பவுன்ஸ் ஆகக்கூடிய செக்கை கொடுத்து மோசடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக 2015ஆம் ஆண்டு கீழமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்படி முன்னாள் உதயம் உரிமையாளர் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தண்டனை உறுதி செய்யப்பட்ட காரணத்தினால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுளனர்.

சென்னையில், சினிமா பைனான்சியர் போத்ரா என்பவர், கடந்த 2002ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளான முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இரா அன்பரசு மற்றும் அவரது மனைவி, உதயம் தியேட்டர் முன்னாள் உரிமையாளராக இருந்த மணி ஆகியோருக்கு 35 லட்சம் ரூபாய் பணம் கடனாக கொடுத்துள்ளார்.

இந்தப் பணத்தை வைத்து ஸ்ரீபெரும்புத்தூரில் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தில் உதயம் இன்ஜினியரிங் கல்லூரி கட்டுவதற்காக வாங்கியதாக கூறப்படுகிறது. கொடுத்த பணத்தை போத்ரா திருப்பிக்கேட்டபோது அவர்கள் கொடுக்காததால், அவர்கள் முன் தேதியிட்டு கொடுக்கப்பட்ட செக்கை வங்கியில் செலுத்தும்போது பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது.

இதுதொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் பைனான்சியர் போத்ரா வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், கடந்த 2015ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி அறக்கட்டளை நிர்வாகி முன்னாள் எம்.பி. இரா. அன்பரசு மற்றும் அவரது மனைவி, உதயம் தியேட்டரின் முன்னாள் உரிமையாளராக இருந்த மணி ஆகியோருக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இறுதியில் உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ததை அடுத்து, தண்டனை விதிக்கப்பட்டவர்களை கைது செய்ய உயர் நீதிமன்றம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்.பி. இரா அன்பரசு மற்றும் அவரது மனைவி காலமானதால், உதயம் தியேட்டர் முன்னாள் உரிமையாளராக இருந்த மணி என்பவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கைது செய்து சிறையில் அடைக்க கீழ்ப்பாக்கம் காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டது. இருந்தபோதிலும், இது குறித்து கீழ்ப்பாக்கம் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், சினிமா பைனான்சியர் போத்ரா தரப்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கைது நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் மணியை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க:பள்ளி மாணவர்களின் தகவல்கள் திருட்டு: முக்கிய நபருக்கு போலீசார் வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details