தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் மேயர் வீட்டில் பணிபுரிந்த காவலாளி உயிரிழப்பு! - மேயர் வீட்டில் பணிபுரிந்த காவலாளி மாரடைப்பால் உயிரிழப்பு

சென்னை: முன்னாள் மேயர் வீட்டில் காவலாளியாகப் பணிபுரிந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்தார். மேலும், கரோனா நோயினால் இறந்துள்ளாரா எனப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மாரடைப்பால் உயிரிழந்த முன்னாள் மேயர் வீட்டின் காவலாளி
காவலாளி மாரடைப்பால் உயிரிழப்பு

By

Published : Jun 16, 2020, 12:41 PM IST

சென்னை நந்தனம் கிழக்கு சிஐடி நகரில் வசித்துவருபவர் ராஜேந்திரன் (55). இவர் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் வீட்டில் காவலாளியாகப் பணிபுரிந்துவந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு ராஜேந்திரன் தனது வீட்டிலிருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்ட அவரது உறவினர்கள் ராஜேந்திரனை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சைதாப்பேட்டை காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, ராஜேந்திரன் கரோனா நோய் தொற்று ஏற்பட்டு இறந்துள்ளாரா என பரிசோதனைக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details