தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் பயன்படுத்த மாட்டேன்: நீதிமன்றத்தில் ஓபிஎஸ் உத்தரவாதம் - உயர் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக்

OPS case: எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த மாட்டேன் என ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

former-cm-ops-given-assurance-to-not-use-admk-flag-and-letter-head-until-appeal-disposal-mhc
அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேட் பயன்படுத்த மாட்டேன் - ஓபிஎஸ்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 4:17 PM IST

சென்னை:எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த மாட்டேன் என ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவிலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால், இவற்றைப் பயன்படுத்த ஒபிஎஸ் அணியினருக்குத் தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த ஒ.பி.எஸ்-க்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஒ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை நவம்பர் 16ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் வழக்கின் மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இடைக்காலத் தடை உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் நிலை என்ன? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த ஒ.பன்னீர் செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் P.H.அரவிந்த் பாண்டியன், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாகவும், தீர்ப்பு வரும் வரை இந்த வழக்கை ஒத்திவைக்கலாம் எனவும் கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், தீர்ப்பு வரவில்லை என்றால், இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்து வாதத்தைத் தொடங்கலாமே? எனத் தெரிவித்தார். அவ்வாறு ஒத்திவைப்பதாக இருந்தால் பன்னீர் செல்வத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டிக்க வேண்டும் என்றார்.

இதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், வழக்கு நிலுவையில் உள்ள வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த மாட்டேன் என ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் உத்தரவாதமும் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி, வழக்கின் விசாரணையை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் உத்தரவாதத்தை மீறினால் நீதிமன்ற கவனத்திற்குக் கொண்டுவரும்படி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் தெரிவித்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க:சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்!

ABOUT THE AUTHOR

...view details