சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி நோக்கி செல்லும் பறக்கும் மின்சார ரயிலில் பலரும் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர், ரயிலின் மேலே தலைகீழாக நின்றவாறு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.
சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியது. இந்நிலையில் இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த சிறுவன் ஒருவரை அடையாளம் கண்டு, பெற்றோரோடு வரவழைத்தனர்.