தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய மிரட்டல் - மியான்மரிலிருந்து திரும்பியவர்கள் பேட்டி! - Myanmar returnee

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய தங்களைக்கட்டாயப்படுத்தியதாக மியான்மரில் இருந்து தமிழ்நாடு திரும்பியவர்கள் தெரிவித்தனர்.

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய கட்டாயப்படுத்தினர் - மியான்மரிலிருந்து திரும்பியவர் பேட்டி
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய கட்டாயப்படுத்தினர் - மியான்மரிலிருந்து திரும்பியவர் பேட்டி

By

Published : Oct 5, 2022, 10:41 AM IST

சென்னை:மியான்மரில் சட்டவிரோத வேலைகளில் ஈடுபட்டு சிக்கித் தவித்த தமிழ்நாட்டைச்சேர்ந்த 13 பேர் இன்று (அக் 5) காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். இதில் புதுக்கோட்டை அப்துல்லா, தென்காசி விக்னேஷ், கோயம்புத்தூர் வெஸ்லி மற்றும் குமார், வேலூர் அகமது மற்றும் சச்சின், ஊட்டி சிவசங்கர், பொள்ளாச்சி செளந்தர், அரியலூர் செல்வி, கன்னியாகுமரி பிரசாந்த் மற்றும் ஜெனிகாஸ், கரூர் மணிக்குமார் மற்றும் திருச்சி செபாஸ்டின் ஆகியோர் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

இவர்களை வெளிநாட்டுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். இதன்பின்னர் செய்தியாளர்களைச்சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், 'தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து தகவல் தொழில்நுட்ப வேலைகளுக்கென்று பல்வேறு ஏஜென்ட்கள் மூலம் அழைத்துச்சென்று, தாய்லாந்து நாட்டிற்கு பக்கத்தில் இருக்கும் மியான்மர் நாட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு சொன்ன வேலையைத் தவிர்த்து மற்ற வேலைகளைக் கொடுத்துள்ளனர்.

இதனை செய்ய இவர்கள் மறுத்துள்ளனர். அங்கு சிக்கித்தவித்த நபர்கள் குறித்த செய்தியின் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் முதலமைச்சர் கடிதம் எழுதினார். இந்நிலையில் அவர்களை தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் தற்போது அழைத்து வந்துள்ளனர்.

அவர்களை அவர்களது இல்லம் செல்ல வழிவகை செய்துள்ளோம். சுமார் 50 தமிழர்கள் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் வருகிறது. அழைத்துச்சென்ற ஏஜென்ட்கள் குறித்து முறையான தகவல்கள் கிடைக்கவில்லை. வெளிநாட்டிற்கு வேலை செல்வோர் தமிழ்நாடு அரசில் பதிவு செய்து விட்டுச்செல்ல வேண்டும். ஒவ்வொருவரையும் அழைத்துப்பேசி இருக்கிறோம். அவர்கள் நிலை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று பொருளாதார ரீதியான உதவிகள் செய்யப்படும்” என்றார்.

மியான்மரிலிருந்து திரும்பியவர் பேட்டி

தொடர்ந்து மியான்மரில் சிக்கித் தவித்தவர்கள் பேசுகையில், “தகவல் தொழில்நுட்ப வேலை இல்லாமல் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைக்கும் வேலையை செய்ய வேண்டும் என நிர்பந்தித்தனர். அவ்வாறு செய்ய மறுத்தவர்களை அடித்து துன்புறுத்தினர். அதற்கு தண்டனைகளையும் கொடுத்தனர். எங்களை மீட்டு வந்த மத்திய,மாநில அரசுகளுக்கு நன்றி” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:மியான்மரில் சிக்கி தவித்த 13 பேர் தமிழ்நாடு திரும்பினர்

ABOUT THE AUTHOR

...view details