தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு: 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஆணை

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு சுகாதாரத் துறைக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு:6வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு
கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு:6வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு

By

Published : Nov 16, 2022, 5:36 PM IST

சென்னை:சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து விளையாட்டு வீராங்கனையுமான பிரியா, கால் மூட்டு வலிக்காக பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஜவ்வு கிழிந்திருப்பதால் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். அதன் பிறகும் வலி தீராததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உயிரைக் காப்பாற்ற காலை அகற்ற வேண்டும் எனக்கூறி, காலை அகற்றியுள்ளனர்.

அதன்பின் தொடர் சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (நவ.15) மரணம் அடைந்தார். பெரியார் நகர் மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக கால்பந்து விளையாட்டு வீராங்கனை உயிரிழந்த சம்பவம் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச்சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பாஸ்கரன், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத் துணைச் செயலாளருக்கு உத்தரவிட்ட மனித உரிமைகள் ஆணையம், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மனித உரிமைகள் ஆணையத்தின் புலன் விசாரணை குழுவுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:மாணவி பிரியா உயிரிழந்த விவகாரம்: ஓரிரு நாட்களில் அறிக்கை..

ABOUT THE AUTHOR

...view details