தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளப் பாதிப்பால் சேதமடைந்த அரசு ஆவணங்கள், பள்ளி சான்றிதழ்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம் சென்னையில் ஏற்பாடு.. எந்தெந்த பகுதிகள்? - today latest news

Flood Damage Certificate Special Camp: மிக்ஜாம் புயல் வெள்ளப் பாதிப்பினால் சேதமடைந்த அரசு ஆவணங்கள், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்குக் கட்டணமின்றி வழங்கிட சென்னையில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Flood Damage Certificate Special Camp
வெள்ளப் பாதிப்பால் சேதமடைந்த சான்றிதழ்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம் சென்னையில் ஏற்பாடு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 11:07 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழ்நாடு அரசால் பல்வேறு மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மிக்ஜாம் புயல், மழை மற்றும் வெள்ளம் காரணமாக குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்களை நடத்தி அதன் வாயிலாக பொது மக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்குக் கட்டணமின்றி சான்றிதழ்களை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிச 09) உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் சென்னை மாநகரில் மிக்ஜாம் புயல் பாதிப்பினால் மேற்கூறிய சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றை மீண்டும் பெறும் வகையில் சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள 46 பகுதி அலுவலகங்களிலும் வரும் 12.12.2023 ஆம் தேதி அன்று தொடங்கி, தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு.

வ.எண்பகுதி அலுவகம்வார்டு எண்கள்முகவரி
1 1 1, 2, 3, 4 எண்.606, கை.எச்.கராடு, எண்ணுர், சென்கை-600 057
2 2 5, 6, 7, 8, 9 எண்.5/17, எண்ணூர் எக்ஸ்பிரஸ் ரோடு, மஸ்தான் கோயில் தெரு, கக்கன்ஜி நைர், திருவெற்றியுர், சென்னை-600 019
3 3 10, 11, 12, 13, 14 46, மேற்கு மாடவீதி, திருவெற்றியுர், சென்னை-600 019
4 4 15, 16, 17 ஆண்டார்குப்பம் செங்குன்றம் ஹைரோடு, ஜங்சன் TPP சாலை, மணலி, சென்னை-68
5 5 18, 19, 20, 21, 22 127, படசாலை தெரு, மணலி, சென்னை-68
6 6 23, 24, 32 எண்.1, காந்தி முதல் தெரு, புைல், சென்கை-66
7 7 25, 26, 27, 28 எண்.1, பெருமாள் கோயில் மெயின் ரோடு, மாதவரம் பேருந்து நிலையம் அருகில், சென்கை-60
8 8 29, 30, 31, 33 எண்.1, MRH ரோடு, மாதவரம், சென்னை-60
9 9 34, 35, 36, 37, 38 ஷர்மா நகர், UPC ஹாஸ்பிட்டல்
10 10 39, 40, 41, 42, 43 எண்.600, திருவெற்றியூர் ஹை ரோடு, கிருஷ்ணமூர்த்தி தெரு, தண்டையார்பேட்டை, சென்னை-81
11 11 44, 45, 46, 47, 48 96, பார்த்தசாரதி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை-21
12 12 49, 50, 51, 52, 53(LFZ) எண்.6/86, சபரம்பாலு தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை-21
13 13 54, 55, 56, 57, 60 28, சண்முகம் தெரு, ஏழுகிணறு தெரு, ஏழுகிணறு, ஜார்ஜ் டவுன், சென்னை-1
14 14 58, 59, 61, 62, 63 எண்.2, ஆதிகேசவலு தெரு, சிந்தாதிரிபேட்டை, சென்னை-02
15 15 64, 65, 69 எண்.45/107, SRP கோயில் தெரு(தெற்கு), அகரம், சென்னை-82
16 16 66, 67, 68, 70 எண்.32, ஜவகர் நகர், 3வது சர்கிள், 2வது குறுக்குத் தெரு, பெரவள்ளுர், சென்னை-82
17 17 71, 72, 73, 74, 75, 76, 77, 78 எண்.50, அருணாச்சலம் தெரு, கொசப்பேட்டை, 5 லைட் அருகில், சென்னை-12
18 18 79, 80, 81, 82, 83 வடக்கு பூங்கா தெரு, வெங்கடபுரம், அம்பத்தூர், சென்னை-53
19 19 84, 85, 86, 87, 88 சர்ச் ரோடு, பாடி, சென்னை-50
20 20 89, 90, 91, 92, 93 சீதக்காதி சாலை, முகப்பேர் கிழக்கு, இ-சேவை மையம், சென்னை-37
21 21 94, 95, 96, 97, 104 எண்.4, யுனைடெட் இந்தியா நகர், முதல் பிரதான சாலை, பாலவாயல் மார்க்கெட் அருகில், அயனாவரம்
22 22 102, 103, 105, 106, 107 எண்.124, K பிளாக், அண்ணா நகர், 2வது மெயின் ரோடு, சென்னை-40
23 23 98, 99, 100, 101, 108 எண்.4, கோயில் தெரு, கீழ்பாக்கம், சென்னை-10
24 24 109, 110, 111, 118, 119 எண்.9, CIT காலனி, 6வது குறுக்குத் தெரு, மைலாப்பூர், சென்னை-04
25 25 123, 124, 125, 126 எண்.1, சித்திரக்குளம் தெற்கு தெரு, மைலாப்பூர், சென்னை-04
26 26 112, 113, 117, 122 ஆலயம்மன் கோயில் தெரு, தேனாம்பேட்டை, சென்னை-600 018
27 27 114, 115, 116, 120, 121 எண்.12, துளசிங்கம் பெருமாள் கோயில், 2வது சந்து, திருவல்லிக்கேணி, சென்னை- 600 005
28 28 136, 137, 138, 139 எண்.27, 61வது தெரு, 10 வது செக்டர், கே.கே.நகர், சென்னை-78
29 29 127, 128, 129, 130 எண்.2 அம்மன் கோயில் தெரு, வடபழனி, சென்னை-600 026
30 30 133, 140, 141, 142 12, மாசிலாமணி தெரு, தியாகராய நகர், சென்னை-600 017
31 31 131, 132, 134, 135 க.எண்.1, கார்பகரேஷன் காலனி ரோடு, கோடம்பாக்கம், சென்னை-24
32 32 143, 144, 146, 147 MMDA 6வது பிளாக், 33வது தெரு, மதுரவாயல்.
33 33 145, 148, 149, 152 CV கோயில் தெரு, ஆழ்வார்திருநகர், சென்னை-87
34 34 150, 151, 153, 154, 155 மெளன்ட் பூந்தமல்லி சாலை, போரூர், சென்னை
35 35 156, 157, 158, 159 வார்டு அலுவலகம், கோட்டம்-156, அரசு உயர்நிலைப் பள்ளி பாடசாலை, முகலிவாக்கம், சென்னை-12
36 36 160, 161, 162, 163 super Bazzar Shoping complex, புதுத் தெரு, ஆலந்தூர் சென்னை-16
37 37 164, 165, 166, 167 வார்டு அலுவலகம், கோட்டம்-165, ராம் நகர், 8வது தெரு, நங்கநல்லூர், சென்னை-61
38 38 174, 179, 180 எண்.2, 8வது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், தெற்கு அவென்யு சாலை, திருவாண்மியூர், சென்னை
39 39 176, 177, 178 65, வேளச்சேரி மெயின் ரோடு, வேளச்சேரி, சென்னை
40 40 169, 170, 171, 173 115, டாக்டர் முத்துலெட்சுமி சாலை, அடையாறு, சென்னை
41 40A 168, 172, 175 எண்.92, மகாலட்சுமி நகர், ஆதம்பாக்கம், சென்னை
42 41 181, 182, 183, 184 எண்.02, ஸ்கூல் ரோடு, கந்தங்சாவடி, கோட்டம்- 182, வார்டு அலுவலகம், பெருங்குடி, சென்னை-96
43 42 185, 186, 187, 188 கோட்டம்- 188, வார்டு அலுவலகம் எண். 01, டாக்டர் அம்பேத்கர் சாலை, மடிப்பாக்கம், சென்னை-91
44 43 189, 190, 191 கோட்டம்- 189, வார்டு அலுவலகம் எண். 01, துலுக்கானத்தம்மன் கோயில் தெரு, பள்ளிக்கரணை, சென்னை-91
45 44 192, 194, 197, 199 கோட்டம்- 194, வார்டு அலுவலகம் எண். 14, VOC தெரு, ஈங்சம்பாக்கம், சென்னை-115
46 45 193, 195, 196, 198, 200 கோட்டம்- 196, வார்டு அலுவலகம், கண்ணகி நகர் 8வது பிரதான சாலை, துரைப்பாக்கம், சென்னை-97

ABOUT THE AUTHOR

...view details