தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை: போதை மாத்திரை விற்ற ஐந்து பேர் கைது - சென்னை அண்மைச் செய்திகள்

சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்துவந்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 135 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட ஐவர் கைது
சென்னையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட ஐவர் கைது

By

Published : Jun 11, 2021, 3:20 PM IST

சென்னையில் கடந்த 9ஆம் தேதியன்று ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(21) நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த நான்கு பேர் போதை மாத்திரைகள் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். பணம் கொடுத்தால் வாங்கி தருவதாக கார்த்திக் கூற, எங்களிடமே பணம் கேட்கிறாயா? என அந்த நான்குபேரும் கார்த்திக்கை தாக்கியுள்ளனர்.

இதில், காயமடைந்த கார்த்திக் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், ராயப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ், தினேஷ், அருண் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கார்த்திக் டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வருவதும், அதனை பயன்படுத்தி போதை மாத்திரைகளை சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மற்றொரு கார்த்திக் வீட்டை காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது, தடை செய்யப்பட்ட 135 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. போதை மாத்திரைகள் வாங்கி தரக்கூடிய கல்லூரி மாணவர் அஜித் என்பவரும் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : 14 கிலோ கஞ்சா கடத்தல்: இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details