சென்னை: கொருக்குப்பேட்டை அண்ணா நகர் நாவலர் தெருவில் வசித்து வருபவர் ராஜா. இவரது வீட்டில் கடந்த மே 10ஆம் தேதி செல்போன் காணாமல் போனதாக ஆர்கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில் நள்ளிரவில் தனது வீட்டில் செல்போனை சார்ஜ் போட்டு விட்டு, காலையில் எழுந்து பார்க்கும்போது செல்போன் திருடப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தார்.
சிசிடிவியில் சிக்கிய திருட்டு கும்பல்:
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆர்கே நகர் காவல் துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்டமாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், அடையாளம் தெரியாத மூன்று பேர் ராஜாவின் வீட்டில் நுழைந்து செல்போன் திருடியது தெரியவந்தது.