சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஜூன் மாதம் நான்காம் தேதி நந்தா என்பவருக்கு சொந்தமான இரண்டு என்ஜின் பொருத்தப்பட்ட பெரிய ஃபைபர் படகில் மீன் பிடிக்க ஆந்திர மாநிலத்திற்கு பால்ராஜ், துரை, நந்தா, புகழேந்தி, மதி, ஸ்டீபன் ராஜ், கருத்தகண்ணு ஆகிய 7 மீனவர்கள் சென்றனர். இவர்கள் பத்து நாட்களாகியும் வீடு திரும்பவில்லை.
காணாமல் போன மீனவர்கள் - கதறி அழும் குடும்பத்தினர்..! - missing
சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, ஃபைபர் படகில் மீன் பிடிக்க சென்ற ஏழு மீனவர்கள் பத்து நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன மீனவர்களி்ன் குடும்பத்தினர் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அவர்களது தொலைபேசி எண்ணும் துண்டிக்கப்பட்டிருப்பதால் அசம்பாவிதம் ஏதேனும் நடந்திருக்கலாம் என்று மீனவர்களின் குடும்பத்தினர் பதறிப்போயுள்ளனர். வீடு திரும்பாததை நினைத்து மீனவர்களின் குடும்பத்தினர் கவலையில் வாடி வந்துள்ளனர். இந்நிலையில், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்களையும் கண்டுபிடித்து தரக்கோரி கண்ணீர் மல்க சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக அலுவலக அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர்.
இவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் துறையினர், காணாமல் போன ஏழு மீனவர்களையும் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.