சென்னை: மீன்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருவள்ளுர் மாவட்டம், திருவொற்றியூர் குப்பத்தில், சூரை மீன்பிடி துறைமுகம் ரூ.200 கோடி மதிப்பீட்டில் மீன்வளம், நீர்வாழ் உயிரின வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தத் துறைமுகம் அமைக்கும் பணிகள் 70 சதவிகித நிறைவடைந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.
மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி
அதே போல் நாகப்பட்டினம் மாவட்டம் வெள்ளப்பள்ளம் கிராமத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், ஆற்காட்டுத்துறையில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் மீன் பிடி துறைமுகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து ரூ.120 கோடி மதிப்பீட்டில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில், புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகள் 90 சதவிகிதம் முடிக்கப்பட்டு எஞ்சியுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு மீன்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மூன்று மாதங்களில் பிரஸ் கவுன்சில் -தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு