2020-2021ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதேபோன்று, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் கடந்தாண்டு மாணவர் சேர்க்கை விவரங்களின்படி, அரசுக் கல்லூரிகள் , பல்கலைக்கழகங்கள், முன்னிலை வகிக்கும் சுயநிதிக் கல்லூரி ஆகியவைகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்நிலை மாற்றப்பட வேண்டுமென்று பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜுன் 15 ஆம் தேதி, மாணவர் சேர்க்கை குறித்தும், அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் ஆராய்ந்து தெளிவுபடுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில், டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்து ஆராய ஆணையம்;