தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதல் பெண் தலைவர்... வரலாற்றில் இடம்பிடித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்! - 1st women president

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ரூபா குருநாத் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

rupa gurunath

By

Published : Sep 26, 2019, 12:17 PM IST

லோதா கமிட்டியின் பரிந்துரையின் பேரில் இந்திய கிரிக்கெட் வாரியத்திலும்(பிசிசிஐ), மாநில கிரிக்கெட் சங்கத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

அதில் முக்கியமான மாற்றங்களாக:

  • 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவியில் இருக்கக்கூடாது.
  • ஒருவர் தொடர்ந்து 2 முறை பதவி வகித்தால் அடுத்து ஒரு இடைவெளி விட்டு தான் பதவிக்கு வர முடியும்.
  • கிரிக்கெட் அமைப்பில் ஒரே நேரத்தில் ஒருவர் இரண்டு பதவி வகிக்கக்கூடாது.

தேர்தல்:

இந்த புதிய விதிமுறைகளின் படி இந்திய கிரிக்கெட் வாரியம், மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்தலானது வருகிற அக்டோபர் 23ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் பெரும்பாலான மாநிலங்கள் தங்களது நிர்வாகிகளின் தேர்வுகளை, போட்டியிடாமல் ஒருமனதாக தேர்ந்தெடுத்து முடித்துவிட்டன.

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம்:

  • அந்த வரிசையில் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியமும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான டி. சந்திரசேகரன் தலைமையில் நேற்று மாலை போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களின் இறுதிப்பட்டியலை வெளியிட்டர்.
    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
  • மிக முக்கியமாக எந்தவொரு பதவிக்கும் போட்டி இல்லாததால் அனைந்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

முதல் பெண் தலைவர்:

  • இதில் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரான என்.ஸ்ரீநிவாசனின் மகள் ரூபா குருநாத் தலைவராகவும், டி.ஜே.ஸ்ரீநிவாசராஜ் துணைத்தலைவராகவும், கெளரவச் செயலாளராக ஆர்.எஸ்.ராமசாமியும், துணை கெளரவச் செயலாளர் என்.வெங்கட்ராமனும், கௌரவ இணைச்செயலாளராக கே.ஏ.சங்கரும் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
  • இந்தியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த ரூபா குருநாத்?

  • இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவருமான என்.ஸ்ரீநிவாசனின் மகள் ஆவார்.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் உரிமையாளரான குருநாத் மெய்யப்பனின் மனைவியும் ஆவார்.
  • மேலும் இவர் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்திய அணியில் தொடர் சர்ச்சை கிளப்பும் சூதாட்ட புகார்கள்!

ABOUT THE AUTHOR

...view details