சென்னை: ஆலந்தூர் அடுத்த பழவந்தாங்கல் குமரன் தெரு சக்தி விநாயகர் கோயில் எதிரில், ராஜேஷ் மற்றும் காந்திமதி ஆகிய இருவருக்கும் சொந்தமான இரண்டு கார்கள் சாலையில் நின்று கொண்டிருந்தன. இந்த நிலையில் இன்று (டிச.15) அதிகாலை இரண்டு கார்களும் தீப்பிடித்து எரிவதாக அப்பகுதி மக்கள் கிண்டி தீயணைப்புத் துறையினக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்த தகவலின் அடிப்படையில் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்புத் துறையினர், அரை மணி நேரம் போராடி காரில் பற்றிய தீயை அனைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. மேலும் இந்த தீ விபத்தின்போது காரில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.