சென்னையில் உள்ள மிண்ட் சாலையில் மின் கசிவு காரணமாக டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ பிடித்துள்ளது. பெரும் சத்தத்துடன் டிரான்ஸ்பார்மர் வெடித்ததை கண்டு அருகிலிருந்த மக்கள் அதிரச்சியடைந்துள்ளனர்.
டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து! - டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ
சென்னை: டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ பற்றிக்கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீ
இதையடுத்து அப்பகுதி மக்கள் மின்வாரிய ஊழியர்களை அழைத்து உடனடியாக மின் இணைப்பை துண்டிக்குமாறு கூறியுள்ளனர்.
இருப்பினும் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே அங்குள்ள மக்கள் விரைந்து செயல்பட்டதால் தீ பரவாமல் தடுத்தனர்.