சென்னை, தி. நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில், தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகம் இயங்கிவருகிறது. சனி, ஞாயிறு இரண்டு நாள்களும் அலுவலகம் விடுமுறை என்பதால் பணிக்கு ஆள்கள் யாரும் வராத நிலையில், இன்று (டிச. 07) அதிகாலை அலுவலகத்திலிருந்து கரும்புகை வெளியேறியது.
இதைக் கண்ட காவலாளி உடனடியாக இது குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். நடிகர் சங்க விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், தற்போது தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகம் சிறப்பு அலுவலர் கண்காணிப்பின்கீழ் இயங்கிவருகிறது.