சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்பு. இவர் பிரபல நிறுவனம் ஒன்றின் டீலராக இருந்து வருகிறார். இதற்காக அதே பகுதியில் குடோன் வைத்து அந்நிறுவனத்தில் பொருட்களை மொத்தமாக வாங்கி தினமும் வடசென்னை பகுதியில் உள்ள பல்வேறு கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார்.
தனியார் குடோனில் தீ விபத்து - பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் - fire accident
சென்னை: தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ருபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
இந்த குடோனில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், குடோனில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றுவிட்டனர். அப்போது, குடோனில் இருந்து புகைமூட்டம் வெளியானதால், அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து கொருக்குப்பேட்டை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து ஏழுக்கும் மேற்பட்ட வண்டிகளில் வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. பின்னர் தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.