சென்னை:தென் சென்னை திமுக வர்த்தக அணி நிர்வாகியான சைதை சாதிக் கடந்த 26 ஆம் தேதி ஆர்.கே நகரில் நடைபெற்ற கூட்டத்தின்போது பா.ஜ.க பெண் நிர்வாகிகளான குஷ்பு, நமீதா, கௌதமி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டவர்கள் பற்றி தரக்குறைவாகப் பேசிய வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி பெண் நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்திருந்தனர்.
இது தொடர்பான விசாரணை சைபர் கிரைம் பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பாஜக பெண் நிர்வாகிகளை அவதூறாகப் பேசிய வழக்கில் சைதை சாதிக் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல், குறிப்பிட்ட சமுதாய மக்கள் பற்றி தரக்குறைவாகப் பேசுதல், பெண்களின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி..சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்